Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, October 1, 2019

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை


பயிற்சிப் பட்டறை சிறப்பாக நிறைவு பெற்றது. முதுபெரும் எழுத்தாளர் கர்ணன் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இரு தலைமுறை இடைவெளியுள்ள எழுத்தாளர் மாணவர்களிடம் எழுத்தின் மதிப்பையும், தேவையையும் குறிப்பிட்டுப் பேசினார். மொத்தமாக இந்த நிகழ்வின் மூலம் 55+ மாணவர்களிடம் விக்கிப்பீடியா குறித்த ஆழமான அறிமுகத்தை வழங்கமுடிந்தது, அதில் 46 மாணவர்களுக்குப் பயனர்பெயர் உருவாக்கப்பட்டது. அதில் 15 மாணவர்கள் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டியில் தொகுக்கத் தொடங்கினர், அதில் 4 மாணவர்கள் முதன்மைவெளியிலும் தொகுக்கத் தொடங்கினர். இரு மாணவிகள் புதுக் கட்டுரையையும் தொடங்கிவிட்டார். மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சியளித்த நீச்சல்காரன், மகாலிங்கம் மற்றும் ஞா. ஸ்ரீதர், வாய்ப்பை வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், களம் அமைப்பினர் சார்பாக நன்றிகள். ஊடகச் செய்திமேல்விக்கி பக்கம்



வணக்கம் இந்தியா இதழில்