Showing posts with label மருத்துவ முகாம். Show all posts
Showing posts with label மருத்துவ முகாம். Show all posts

Monday, March 9, 2020

மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரைக் கல்லூரி

உலக மகளிர்தினத்தை முன்னிட்டு களம் அமைப்பு சார்பாக மகளிர் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு மதுரைக்கல்லூரியில் மாணவிகளுக்கான  மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவர் ரேவதி ஜானகிராம்., MD., DGO மாதவிடாய் கோளாறுகள் பற்றிய மருத்துவ உரையை வழங்கினார். 

மருத்துவர் அமுதன்., MD உயர் ரத்த அழுத்தம் குறித்த மருத்துவ உரையை வழங்கினார். அடுத்து, திருமதி கண்ணம்மாள் இயற்கை பருத்தி  நேப்கின் குறித்த விழிப்புணர்வை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் திருமதி ராதா, திருமதி மகாலட்சுமி மற்றும் மதுரைக் கல்லூரி தேசிய சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமதி மலர்விழி, திருமதி மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயனுற்றனர்.







Sunday, January 26, 2020

மருத்துவ முகாம் 26 ஜன 2020

குடியரசு தினத்தை முன்னிட்டு களம் அமைப்பு சார்பாக நடைபெற்ற சிறப்பு மகளிர் மருத்துவ முகாம் கலந்து கொண்டவர்கள்
மகளிர் சிறப்பு மருத்துவர்.Dr.,ரேவதி ஜானகிராம்.,M.D.,DGO.,Dr.MGR மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர்., சென்னை.

களம் அமைப்பு சார்பில் அதன் பொறுப்பாளர்கள் ,திரு.வரதராஜன், திரு.,ஜெய்சங்கர், திருமங்கலம் சமூக ஆர்வலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.,உச்சப்பட்டி ஊராட்சி தலைவர்: திருமதி.பிச்சையம்மாள், துணை தலைவர்: திரு.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.









Monday, March 5, 2018

மருத்துவ முகாம் பிப் 18 2018

பெண்கள் நல மருத்துவ முகாம்
ஆலோசனை வழங்கியவர்: மரு. ரேவதி ஜானகிராம் MD, DGO, முன்னாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்.
இடம்: சாமநத்தம் யாதவர் மஹால்