Tuesday, March 10, 2020

மகளிர் தினத் தொடர் ஓட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு களம் அமைப்பு சார்பில் புற்றுநோய் மற்றும் பெண்குழந்தை பாதுகாப்புக்காக விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கூடல் நகர் வானொலி நிலையம் முதல் குமாரம் சாய்பாபா கோவில் அருகில் நிறைவுபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் திரு.செல்வராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 60 மாணவ மாணவிகள் இந்த விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்
திரு.அறிவுச்செல்வம்
திரு.சோலை பழனிவேல்ராசன்
திரு.மணிகண்டன்
திரு.அசோக்குமார்
மற்றும் களம் அமைப்பின் சார்பில்
திருமதி.கண்ணம்மாள்
திருமதி.வித்யா
திரு.கண்ணன்
திரு.வரதராஜன்
செல்வி.மகாலட்சுமி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
சைல்டு ஹெல்ப் லைன் (1098) அமைப்பை சேர்ந்த செல்வி.ரேணுகாதேவி பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்கினார்.









இந்த விழிப்புணர்வு நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆம்புலன்ஸ் சேவை  வழங்கிய அப்போலோ மருத்துவமனைக்கும் பாதுகாப்பு வழங்கிய கூடல்புதூர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் களம் சார்பாக நன்றிகள்


Monday, March 9, 2020

மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரைக் கல்லூரி

உலக மகளிர்தினத்தை முன்னிட்டு களம் அமைப்பு சார்பாக மகளிர் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு மதுரைக்கல்லூரியில் மாணவிகளுக்கான  மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவர் ரேவதி ஜானகிராம்., MD., DGO மாதவிடாய் கோளாறுகள் பற்றிய மருத்துவ உரையை வழங்கினார். 

மருத்துவர் அமுதன்., MD உயர் ரத்த அழுத்தம் குறித்த மருத்துவ உரையை வழங்கினார். அடுத்து, திருமதி கண்ணம்மாள் இயற்கை பருத்தி  நேப்கின் குறித்த விழிப்புணர்வை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் திருமதி ராதா, திருமதி மகாலட்சுமி மற்றும் மதுரைக் கல்லூரி தேசிய சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமதி மலர்விழி, திருமதி மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயனுற்றனர்.