Tuesday, October 1, 2019

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை


பயிற்சிப் பட்டறை சிறப்பாக நிறைவு பெற்றது. முதுபெரும் எழுத்தாளர் கர்ணன் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இரு தலைமுறை இடைவெளியுள்ள எழுத்தாளர் மாணவர்களிடம் எழுத்தின் மதிப்பையும், தேவையையும் குறிப்பிட்டுப் பேசினார். மொத்தமாக இந்த நிகழ்வின் மூலம் 55+ மாணவர்களிடம் விக்கிப்பீடியா குறித்த ஆழமான அறிமுகத்தை வழங்கமுடிந்தது, அதில் 46 மாணவர்களுக்குப் பயனர்பெயர் உருவாக்கப்பட்டது. அதில் 15 மாணவர்கள் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டியில் தொகுக்கத் தொடங்கினர், அதில் 4 மாணவர்கள் முதன்மைவெளியிலும் தொகுக்கத் தொடங்கினர். இரு மாணவிகள் புதுக் கட்டுரையையும் தொடங்கிவிட்டார். மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சியளித்த நீச்சல்காரன், மகாலிங்கம் மற்றும் ஞா. ஸ்ரீதர், வாய்ப்பை வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், களம் அமைப்பினர் சார்பாக நன்றிகள். ஊடகச் செய்திமேல்விக்கி பக்கம்



வணக்கம் இந்தியா இதழில்

Friday, September 27, 2019

யாதவர் கல்லூரியில் பனைநடவு

யாதவர் கல்லூரி மற்றும் களம் அமைப்பு இணைந்து வழங்கும் 2000 பனைவிதை நடவின் தொடக்கவிழா சிறப்புடன் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஐயா.திரு.சேகர் அவர்கள் தலைமையில் நாட்டு நலத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் திரு.மலைச்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் திரு.சபரிநாதன் ஆகியோர்  முன்னிலையில் நமது களம் அமைப்பின் பொருளாளர் திரு.ராஜேஷ்கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.விளக்கவுரை நிறுவனர் திரு.வரதராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திரு.அறிவுச்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் ,களம் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 80 நபர்கள் இதில் பங்கேற்றனர்.அனைவருக்கும் நன்றி.









Sunday, September 22, 2019

பனைபுரட்சி திருவிழாவில் களம்

செப்டம்பர் 22 அன்று பனைவிதை நடவு நிகழ்ச்சியில் 
ஆத்திகுளம் பனை 
நடவு நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் எண்ணிக்கை 30.
நாகனாகுளம் பனை நடவு நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின்
எண்ணிக்கை 26.
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த  களத்தின் நிகழ்வை ஊக்கப்படுத்தும் விதமாக வந்த ஊடகவியலாளர்கள்.,
தினமலர்,வணக்கம் இந்தியா,கலைஞர் தொலைக்காட்சி ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

Monday, September 9, 2019

மதுரையில் பனைப்புரட்சி அறிவிப்பு


மதுரை மாவட்டத்தில் இயற்கை அமைப்புகள் ஒருங்கிணைத்து  ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள், 22-9-19 அன்று  நடப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அருகே உள்ள நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

*இயற்கை அமைப்புகள் விபரங்கள்:*

1.நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் - செல்லூர் கண்மாய்
2.பனையோலை-
செல்லூர் கண்மாய்
3. வனத்துக்குள் வண்டப்புலி-
வண்டப்புலி கண்மாய்  கண்மாய்
4. களம் அமைப்பு- ஆத்திகுளம் கண்மாய் & நாகனாகுளம் கண்மாய்
5. திருநகர் பக்கம் -
தென்கால் கண்மாய்
6. நீர்வனம்- விளாச்சேரி கண்மாய்
7. ஊர்வனம் - புளியங்குளம் கண்மாய்
8. Wish to help -  தனக்கன்குளம் கண்மாய்
9. ஆன்டனி - கரிசல் குளம் கண்மாய்
10. சுவாசம் நண்பர்கள் -
கடச்சனேந்தல் கண்மாய்
ஒத்தக்கடை கண்மாய்
11. வரிச்சூர் அரசு பள்ளி
12. மரம் துரைராஜ் - திருப்பரங்குன்றம்
13. ஜேயபிரகாஷ் -
ஐயர் பங்களா கண்மாய்
14. அழகு முருகன் - குடிசேரி கண்மாய்
15. காண்டிவா அறக்கட்டளை மேலூர் ஆற்றங்கரை
16. பாரடைஸ் பவுன்டேசன் வண்டியூர் கண்மாய்
17. மரம் செய்ய விரும்பு - வண்டியூர் கண்மாய்
18. சித்தர் கூடம் - திருமங்கலம்
19. மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை- காந்திபுரம்
20. வைகை நதி மக்கள் இயக்கம்- முடக்கத்தான் கண்மாய்
21. மதுரை மண்ணின் மைந்தர்கள்
22. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை, செல்லூர் கண்மாய்

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு
*மதுரை பனை புரட்சி குழு*

Monday, July 8, 2019

நம்பிக்கை அறக்கட்டளை விருது வழங்கல்

நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் நமது அமைப்பின் செயல்பாட்டிற்கு விருது வழங்கப்பட்டது.